எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Windows XP installation tips in Tamil


என்னடா இது 2010ல் Windows XP பற்றி இவன் சொல்லிக்கிட்டு இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். பல நண்பர்கள் இன்னும் Windows XP யை ஆனந்தமாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் கணினியில் உள்ள Windows XP யை முழுவதுமாக நீக்கி(FORMAT) பின்னர் மறுபடியும் எவ்வாறு புதிதாகப் பதிவது என விவரமாக எமது TECHதமிழ் வாசகர்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
படி #1:
Windows XP Installation CD யை CD அல்லது DVD யை உள் நுழைக்கவும்.
படி #2:  உங்கள் கணினி CD/DVDஇல் இருந்து இயங்க ஆரம்பிக்க BIOS இல் “First Boot Device” யை மாத்திர வேண்டும். ஒவ்வொரு கணினியிலும் வெவ்வேறு விதமான BIOS முகப்பு இருக்கும்.
படி #3
உங்கள் கணினியை reboot செய்யவும். “Press any key to boot from CD..”  என்ற அறிவிப்பு வந்தவுடன் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தவும்.
படி #4
ஒரு முழுமையான நீல நிற முகப்பு தோன்றும். Windows Xp யை பதிய தேவையான கோப்புகள் உங்கள் கணினியில் தற்காலிகமாக இறக்கம் செய்துவைக்கப்படும். இந்தச் செயல் சில நிமிடங்களுக்கு நடக்கும். அதன் பின்னர் “. . . . . . .” என்ற அறிவிப்பு வந்தவுடன் Enter Key யை அழுத்தவும்.
படி #5
Windows கடை நிலைப் பயனாளர் உடன்பாட்டு  அறிக்கையை ஆமோதித்து F8 பொத்தானை அழுத்தவும்.
படி6:
ஏற்கனவே இருக்கும் பழய Windows பதிப்புகள் ஏதும் பழுது பார்க்க வேண்டுமா அல்லது புதிய பதிப்பு வேண்டுமா என கேட்கப்படும்.
படி 7
இது மிகவும் முக்கியமான படி. முழுவதுமாக C: இல் மறு பதிப்பு செய்ய,
C:\ எனும் இடத்தில் தெரிவு செய்து “D Key”யை அழுத்தவும். இந்தச் செயல் C:\ல் இருக்கும் அனைத்து தரவுகளையும்(Datas) முழுமையாக நீக்கத் துவங்கும் செயல் ஆகும்.
மீண்டும் ஒருமுறை தங்களிடம் உறுதி செய்துகொள்ள “L Key” யை அழுத்துமாறு கேட்கும். அதை அழுத்தவும்.

படி: 8
பிரிக்கப்படாத பகுதியை பிரிக்கும் படி இது. “Unpartitioned space xxxxxMB” என்பதைத் தெரிவு செய்து C பொத்தானை அழுத்தவும்.
படி: 9
உங்கள் வன்தட்டை FORMAT செய்யும் படி இது. NTFS “Quick” (recommended because NTFS is faster and more secure)  எனும் முறையைத் தெரிவு செய்யவும். (NTFS file system is always better than FAT file system).

படி: 10
பிறகு Windows பதிப்பு நிறுவ ஆரம்பிக்கப்படும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: