எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Live CD என்றால் என்ன?



Live CD என்றால் என்ன?

லைவ் சீடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சீடி.

ஒரு லைவ் சீடியை சீடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் கணினி ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பதிலாக சீடியிலுள்ள இயங்குதளத்திலேயே கணினி பூட் செய்ய ஆரம்பிக்கும். லைவ் சீடியிலிருந்து கணினி இயங்க ஆரம்பித்தும் எமது விருப்பப்படி கணினியில் வலம்வர முடியும். அதிலிருந்தே மீண்டும் கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் சீடி ட்ரைவிலிருந்து லைவ் சீடியை அகற்றி விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.

லைவ் சீடி எமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. ஒரு புதிய இயங்குதளம் ஒன்றைக் கணினியில் நிறுவ ஹாட் டிஸ்கில் இடம் ஒதுக்கவோ அல்லது அதற்கு நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமோ இல்லை. அதனை கணினியில் நிறுவாமலேயே இயக்கிப் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது... லைவ் சீடி

ஹாட்டிஸ்கில் நிறுவியிருக்கும் இயங்குதளம் செயற்பட மறுக்கும் போது ஒரு லைவ் சீடியை பயன்படுத்தி எமது பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

குறிப்பாக உபுண்டு போன்ற லினக்ஸ் இயங்கு தளத்தின் பல பதிப்புகள் word processor, spreadsheet program, graphics editor, web browser போன்ற பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் கணினிப் பயனர்கள் ஒரு லைவ் சீடியை எந்தவொரு கணினியில் இட்டும் ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பாதிப்புகள் வராமல் தமது பணிகளை மேற்கொள்ள முடியும்.


லைவ் சீடியை ட்ரைவிலிட்டதும் கணினி பூட் ஆகாமல் மறுபடியும் ஹாட்டிஸ்கிலிருந்தே இயங்க ஆரம்பித்தால் BIOS இல் மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கு நீங்கள் கணினி பூட் ஆக ஆரம்பிக்கும் போதே டெல் விசையை அழுத்தி பயோஸ் செட்டப்பில் நுளைய வேண்டும். (எனினும் இது கணினிக்குக் கணினி வேறுபடலாம்) அங்கு கணினியிலுள்ள பூட் சாதனங்கள் பட்டியலில் சீடி ட்ரைவை முதல் பூட் சாதனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பயோஸில் செய்யும் இந்த மாற்றத்தை கணினியில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு சேமித்துக்கொள்ள முடியும். ஒரு லைவ் சீடி ட்ரைவில் இல்லாத போது கணினி ஹாட் டிஸ்கிலிருந்தே பூட் ஆக ஆரம்பிக்கும்.

அனேகமாக லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புகள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன.

இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அல்லது இந்த சீடிக்களை தபாலில் இலவமாக வரவழைத்துக்கொள்ளவும் முடியும். லினக்ஸ் தவிர Mac Os, Windows, sunjava Desktop. OpenBSD எனப் பல்வேறு இயங்கு தளங்கள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன.

இவற்றுள் ஏதோவொரு லைவ் சீடியைக் கைவசம் வைத்திருப்பது ஹாட் டிஸ்கில் இருந்து கணினி பூட் ஆக மறுக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குப் பபயன்படக் கூடும். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: