எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு


நாம் cameraவில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப்படங்களை நாம் pendriveவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதே நேரம் கணினியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும். எனவே புகைப்படங்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக் கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்து கொள்ளலாம்.
1. Paint ஐப் பயன்படுத்துதல்:
Paint ஐத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [Strat--> All Programs --> Accessories --> Paint ]
இதிலே File இனுள் Open என்பதன் மூலம் நீங்கள் அளவைக் குறைக்க எண்ணும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் திறந்து கொண்ட படத்தினை சேமிக்க(Save) வேண்டியதுதான்.[Ctrl +S]
இப்பொழுது உங்கள் படத்தின் அளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால் அதிகளவான படங்களை செய்வது மிகுந்த சிரமமாயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு படமாகவே செய்துகொள்ள வேண்டும்.
2. MS OFFICE Picture Manager ஐப் பயன்படுத்தல்:
இதனைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [ Start --> All Programs --> Microsoft Office --> Macrosoft Office 2010 Tool--> Microsoft Office Picture Manager ]
இப்பொழுது Microsoft Office Picture Manager இனது வலப்பக்கத்தில் “Add a new picture shortcut” என்பதை click செய்யவும்.
இப்பொழுது தோன்றும் windowவில் உங்கள் புகைப்படங்கள் உள்ள Folderஐத் தெரிவுசெய்து “Add” என்பதை click செய்யவும்.
இப்பொழுது அனைத்து புகைப்படங்களும் தோன்றும்.
“Ctrl + A” ஐக் கொடுத்து அனைத்து புகைப்படங்களையும் தெரிவு செய்து “Edit Pictures” என்பதை click செய்யவும்.
இதிலே “Resize” என்பதைக் கொடுக்கவும். பின்னர் “Document-Large (1024x768px)” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும். பின் படத்தை சேமித்துக் கொள்ளவும்.
உங்கள் புகைப்படங்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு சேமிக்கப்படும்.  சேமித்து முடிந்ததும் Microsoft Office Picture Manager ஐ மூடிக்கொள்ளவும். அவ்வளவுதான் உங்கள் புகைப்படங்களின் அளவு குறைக்கப்பட்டுவிடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: