எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Wikipedia-வின் பயனுள்ள சேவைகள்


தகவல் களஞ்சியமான Wikipedia உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது. ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் Wikipedia. இது உண்மை என்றாலும் Wikipedia-வில் ஏனைய பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என பார்க்கலாம்.

1. விக்சனரி:
நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம். நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.
இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை type செய்து enter கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது. இந்த தளத்திற்கு செல்ல http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
2. விக்கியினங்கள் 
விலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.
உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன. இந்த தளத்திற்கு செல்ல - http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
3. விக்கி நூல்கள்
Wikipedia-வில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது Wikipedia. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.
புத்தகங்களை PDF கோப்பில் download செய்து கொள்ளலாம்.  இந்த தளத்திற்கு செல்ல - http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
4. விக்கிமேற்கோள் (Quotes)
அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள்.  இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.  இந்த தளத்திற்கு செல்ல - http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
5. விக்கி பல்கலைகழகம்
Wikipedia-வில் உள்ள இன்னொரு பயனுள்ள சேவை இந்த விக்கி பல்கலைகழகம். இந்த சேவையும் மாணவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை இன்னும் தமிழில் ஆரம்பிக்கப்படவில்லை.  இந்த தளத்திற்கு செல்ல - http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page
6. விக்கிசெய்தி
உலக செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய உதவுவது தான் இந்த விக்கி செய்தி சேவையாகும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: