எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

அனைத்து தேடல்களையும் சேமித்து வைக்கும் கூகுள்

கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களும் இனிமேல் கூகுள் கணக்கில் சேவ் செய்து வைக்கப்படும்.
அனைத்து உலாவி வழியாகவும் அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன.
இதுவரை கூகுள் சாதன தேடல்கள் அனைத்தும் குக்கீகளாக ஒருவரின் பெர்சனல் கணனியில் பதிந்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த குக்கீ கோப்புகளை நீங்கள் சிகிளீனர் மற்றும் பிற அது போன்ற புரோகிராம் மூலம் நீக்கும் போது, அந்த தேடல்கள் கிடைக்காது.
ஏற்கனவே தேடப்பட்ட தேடல்கள் வேண்டும் எனில், இதற்கென கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதே கணனியில் வேறு ஒரு உலாவியில் தேடல்களை மேற்கொள்கையில் கூட, இவை கிடைக்காது. அப்படி கிடைக்கும் வகையில் செட்டிங்ஸில் மாற்றங்ளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னை இனி இருக்காது.
கூகுள் சென்ற வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நம் தேடல்கள் அனைத்தும் நம் கூகுள் கணக்கில் சேவ் செய்யப்பட்டு, நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்றன.
ஒவ்வொரு முறையும் லொகின் செய்து, நாம் கூகுள் தேடல்களை மேற்கொள்கையில் தேடல்கள் அனைத்தும் கணக்கில் சேவ் செய்யப்படுகின்றன.
இவை அடுத்த முறை வேறு ஒரு உலாவி வழியாக தேடல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அப்போதும் அவை கணக்கில் சேவ் செய்யப்பட்டதிலிருந்து கிடைக்கின்றன.
லொகின் செய்யப்படாமல் தேடல்களை மேற்கொண்டாலும் இவை கிடைக்கும். https://www.google.com/preferences என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இவை கிடைக்கும். இந்த தளத்தில் Safe Search filter மாற்றலாம்.
ஒரு பக்கத்தில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். பெர்சனல் தேடல்கள், தடை செய்யப்பட்ட தள முகவரிகள் குறித்தும் செட் செய்திடலாம்.
இது போல தேடல்களை கூகுள் கணக்கில் சேவ் செய்து பின்னர் மீண்டும் விரும்புகையில் கிடைக்கும்படி செய்திட வேண்டும் என்பது, கூகுள் வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வெகு நாள் விருப்பமாகும். இந்த விருப்பத்தினை கூகுள் தளம் நிறைவேற்றியுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: