சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும். அதனாலேயே கணினி
வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை. உங்கள் கணினி speed ஆக
வேண்டுமா? இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட ஒரு அழகிய மென்பொருள்
ஒன்று உள்ளது. அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC. இதோ இந்த
SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு 

- இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
- இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க http://download.cnet.com/SpeedUpMyPC-2011/3000-18512_4-10602643.html
Friday, November 25, 2011
கணிணிக்குறிப்புக்கள்
0
comments
டாக்குமெண்ட் கோப்புகளை JPG படங்களாக மாற்றிகொடுக்கும் பயனுள்ள தளம்.
நம்மிடம்
இருக்கும் டாக்குமெண்ட் கோப்புகளான வேர்டு (Word) , எக்சல் (Excel )
மற்றும் பவர்பாயிண்ட் (Power Point ) போன்ற கோப்புகளை Jpg படங்களாக மாற்றி
கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நம்மிடம்
உள்ள டாக்குமெண்ட் கோப்புகளை சில சமயங்களின் ஆன்லைன் மூலம் பகிர்ந்து
கொள்ளும் போது பல பேர் அதை அப்படியே காப்பி எடுத்து எந்த அனுமதியும்
பெறாமல் தங்களின் தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். முக்கியமான
கோப்புகளை படங்களாக இனி எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://doc-to-image.com
இத்தளத்திற்கு
சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை
பதிவேற்றம் செய்ய வேண்டும் அடுத்து வரும் திரை படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது
இதில் View என்று இருப்பதை சொடுக்கி அடுத்து வரும் திரையில் நாம்
பதிவேற்றம் செய்த கோப்புகளை படங்களாக பார்க்கலாம். இந்த படத்தின் மேல்
Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணினியில் JPG
படங்களாக சேமிக்கலாம். வேர்டு , எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை
நாம் இந்த முறையில் எளிதாக படங்களாக மாற்றலாம். கோப்புகளை படங்களாக மாற்ற
விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக