1. Paint ஐப் பயன்படுத்துதல்:
Paint ஐத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [Strat--> All Programs --> Accessories --> Paint ]
இதிலே File இனுள் Open என்பதன் மூலம் நீங்கள் அளவைக் குறைக்க எண்ணும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் திறந்து கொண்ட படத்தினை சேமிக்க(Save) வேண்டியதுதான்.[Ctrl +S]
இப்பொழுது உங்கள் படத்தின் அளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால் அதிகளவான படங்களை செய்வது மிகுந்த சிரமமாயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு படமாகவே செய்துகொள்ள வேண்டும்.
2. MS OFFICE Picture Manager ஐப் பயன்படுத்தல்:
இதனைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [ Start --> All Programs --> Microsoft Office --> Macrosoft Office 2010 Tool--> Microsoft Office Picture Manager ]
இப்பொழுது Microsoft Office Picture Manager இனது வலப்பக்கத்தில் “Add a new picture shortcut” என்பதை click செய்யவும்.
இப்பொழுது தோன்றும் windowவில் உங்கள் புகைப்படங்கள் உள்ள Folderஐத் தெரிவுசெய்து “Add” என்பதை click செய்யவும்.
இப்பொழுது அனைத்து புகைப்படங்களும் தோன்றும்.
“Ctrl + A” ஐக் கொடுத்து அனைத்து புகைப்படங்களையும் தெரிவு செய்து “Edit Pictures” என்பதை click செய்யவும்.
இதிலே “Resize” என்பதைக் கொடுக்கவும். பின்னர் “Document-Large (1024x768px)” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும். பின் படத்தை சேமித்துக் கொள்ளவும்.
உங்கள் புகைப்படங்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு சேமிக்கப்படும். சேமித்து முடிந்ததும் Microsoft Office Picture Manager ஐ மூடிக்கொள்ளவும். அவ்வளவுதான் உங்கள் புகைப்படங்களின் அளவு குறைக்கப்பட்டுவிடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக