7:00 PM |
Blogger-ல் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய blogger-ன் Page Views அதிகரிக்கக் கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த Facebook-ன் Recommendations விட்ஜெட். நாம் Facebook-ல் பகிரும் பதிவுகளில் மற்றவர்களால் அதிகமான பரிந்துரை செய்யப்படும் பதிவுகள் இந்த விட்ஜெட்டில் வரிசை படுத்துவதால் வாசகர்கள் இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த விட்ஜெட்டை blog-ல் சேர்ப்பதால் கண்டிப்பாக உங்களுடைய Page Views அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
- Width, Height - இரண்டும் விட்ஜெட்டின் அளவுகளை தேர்வு செய்ய.
- Header – விட்ஜெட்டின் தலைப்பு பகுதி தேவயில்லை என்றால் Tick mark நீக்கி விடுங்கள்.
- Color Scheme – Template-ன் நிறத்திற்கு ஏற்ப விட்ஜெட்டின் நிறத்தை தேர்வு செய்து கொள்ள. கருப்பு நிற Template உபயோகித்தால் Dark என்பதை தேர்வு சீது கொள்ளுங்கள்.
- Border color- Border-ன் நிறத்தை தேர்வு செய்ய
இதில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்த பின்னர் கடைசியாக உள்ள Get Code என்பதை click செய்யுங்கள். உங்களுக்கு இரண்டு coding வந்திருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள XFBML coding copy செய்து கொள்ளுங்கள்.
இந்த coding copy செய்து கொண்டு உங்கள் blogger account-ல் நுழைந்து Design – Add a Gadget – Html JavaScript – சென்று copy செய்த coding paste செய்யவும்.
பின்னர் Save பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் facebook-ன் Recommendations விட்ஜெட் உங்கள் blogger-ல் சேர்ந்து இருக்கும். தேவையென்றால் விட்ஜெட்டை உங்களுக்கு தேவையான இடத்தில் நகர்த்தி வைத்து கொள்ளுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக