இவ் இயங்குதளங்களில் வரிசையில் Mac OS X Mountain Lion எனும் புதிய பதிப்பு ஒன்றினை அண்மையில் அப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இவ் இயங்குதளம் வெளியிடப்பட்ட முதல் நான்கு நாட்களில் மட்டும் 3 மில்லியன் பயனர்கள் அதனை தரவிறக்கம் செய்திருந்தனர்.
இப்படி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள Mac OS X Mountain Lion இயங்குளத்திற்கான முதாலவது அப்டேட்டினை தற்போது அப்பிள நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் Mac OS X Mountain Lion இயங்குதளத்தில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
Onislamicway SMS சேவை
இடுக்கைகள்
-
▼
2012
(236)
-
▼
செப்டம்பர்
(43)
- Mountain Lion இயங்குதளத்திற்கான முதலாவது அப்டேட்ட...
- கணனியை முடக்கும் வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துற...
- கூகுள் பிளசின் புத்தம் புதிய வசதி
- பிளாஸ் மெமரிகளில் இழந்த தரவுகளை மீட்பதற்கு
- இணைய வேகத்தினை அதிகரிப்பதற்கு
- அண்டவெளியில் 2 புதிய விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு
- விண்டோஸ் 8ல் மென்பொருட்களின் உதவியின்றி Screensho...
- கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு
- விரைவில் புதிய தோற்றத்தில் யூடியூப்
- மனிதனின் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக...
- 1AVCenter: கணனியில் அவசியம் காணப்பட வேண்டிய மென்ப...
- கணனியை முடக்கும் புதிய வைரஸ்
- அறிமுகமாகின்றது LG Optimus L9 கைப்பேசிகள்
- கையில் பிடித்த படியே கைபேசிகளுக்கு சார்ஜ் போடலாம்:...
- கணனியின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு
- மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010ன் சிறப்பம்சங்கள்
- பயர்பொக்சின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
- RAM Memory-ன் செயல்பாடுகள்
- Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
- அறிமுகமாகின்றது சோனியின் Xperia டேப்லெட்கள்
- Olloclip: iPhoneகளில் துல்லியமான புகைப்படங்களை எட...
- SkyDrive வசதியை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்து...
- சாம்சங் கேலக்ஸ் நோட் IIன் அறிமுக வீடியோ வெளியீடு
- கைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- ஆண்ட்ராய்ட் கைபேசிகளை முழுமையாக பக்கப் செய்வதற்கு
- அதிரடியாக வெளியிடப்பட்டது Firefox 16 பீட்டா பதிப்பு
- விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
- வயர்லெஸ் சார்ஜ் முறையுடன் வெளியாகின்றது Nokia Lum...
- Collins Revision Algebra: மாணவர்களுக்கு அவசியமான ...
- Notes for GMail: ஜிமெயிலின் புத்தம் புதிய வசதி
- µTorrent மென்பொருளின் புதிய பதிப்பை தரவிறக்கம் செ...
- செப்.12ஆம் திகதி வெளியாகிறது அப்பிளின் iPhone 5
- அனைத்து தேடல்களையும் சேமித்து வைக்கும் கூகுள்
- மேம்படுத்தப்பட்ட CCleanerஇன் புதிய பதிப்பை தரவிறக...
- File History: விண்டோஸ் 8ல் மேம்படுத்தப்பட்ட வசதி
- Flash கோப்புக்களை .exe கோப்புக்களாக மாற்றியமைப்ப...
- வந்துவிட்டது கூகுள் குரோமின் புதிய பதிப்பு
- Non-Market Android Apps-களை கைபேசியில் நிறுவுவதற்கு
- விண்டோஸ் அப்ளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்க...
- அழகான புகைப்பட ஆல்பத்திற்கு
- (youtube) யூடியூப்பில் விளம்பரத்தை தவிர்ப்பதற்கு
- அன்ரோயிட்டினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் ...
- இணையத்தில் கோப்புகளை சேவ் செய்திட
-
▼
செப்டம்பர்
(43)
Mountain Lion இயங்குதளத்திற்கான முதலாவது அப்டேட்டினை வெளியிட்டது அப்பிள்
2:11 PM |
கணனியை முடக்கும் வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
2:10 PM |
இந்த வைரஸ் பாதித்த கணனியில் அதன் இயக்கம் முடக்கப்பட்டு, திரைக்காட்சி நிறுத்தப்பட்டு, நீங்கள் தவறான தளத்தைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள்.
எனவே உங்கள் கணனியின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமானால் குறிப்பிட்ட கட்டணத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும், அபராதத் தொகை செலுத்துவதற்கான லிங்க்கும் தரப்படுகிறது.
இது போல நிகழ்வுகள் அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து எப்.பி.ஐ அமைப்பின் இன்டர்நெட் குற்றப் பிரிவு அதிகாரி டோன்னா கிரிகோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது Reveton ransomware என்னும் வைரஸால் ஏற்படுகிறது. பலர் எங்களுக்கு இது குறித்து புகார் அனுப்பி உள்ளனர்.
பலர் அபராதத் தொகையையும் செலுத்தி உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையினை எப்.பி.ஐ எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியேற இதுவரை எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கும் அப்டேட் பைல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
கூகுள் பிளசின் புத்தம் புதிய வசதி
2:09 PM |
தற்போது கூகுள் நம்முடைய URL-ஐ மாற்றி கொள்ளும் வசதியை புகுத்தி உள்ளனர்.
அதாவது நீங்கள் கூகுள் பிளசில் ஒரு கணக்கு உருவாக்கும் பொழுது உங்களுக்கென ஒரு 21 இலக்க ஐடிஎண் கொடுத்து கூகுள் பிளஸ் URL அமைக்கப்படும்.
இதை ஞாபக வைத்து கொள்வது அரிது. ஆனால் பேஸ்புக் தளத்தில் இந்த எண்ணுக்கு பதிலாக நமக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL-ஐ மாற்றி கொள்ளும் வசதி உள்ளது.
இனி கூகுள் பிளசிலும் URL மாற்றி கொள்ளும் வசதியை புகுத்தி உள்ளனர். உதாரணமாக
இது போன்று மாற்றி கொள்ளலாம். ஞாபகம் வைத்து கொள்வதும் எளிது, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எளிதாக இருக்கும். இந்த வசதி இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.
இந்த வசதி உங்களுக்கு தயாராகிய உடன் கூகுள் பிளசை திறந்தவுடன் மேல் பகுதியில் அதற்கான அறிவிப்பை காணலாம்.
அதில் உள்ள Change URL என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL மாற்றி கொள்ளலாம் அல்லது உங்களின் ப்ரோபைல் பக்கத்தில் About பகுதிக்கு சென்று Google+ URL பகுதியில் Claim என்பதை அழுத்தி URL மாற்றி கொள்ளலாம் அல்லது இந்த லிங்கில் Google+ Verificationசென்று அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் கூகுள் பிளசின் இந்த வசதியை பெறலாம்.
|
பிளாஸ் மெமரிகளில் இழந்த தரவுகளை மீட்பதற்கு
2:09 PM |
அதாவது தரவுகள், தகவல்களை இலகுவாக கணனிக்கு கணனி பரிமாற்றவும், இலகுவாக உடன் எடுத்துச் செல்லக்கூடியதாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுவிளங்கும் பிளாஸ் மெமரிகளில் சேமிக்கப்பட்ட தரவுகள் வைரஸ் தாக்கத்தினாலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ அழிக்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இச்சந்தர்ப்பங்களில் இழக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்கென SoftOrbits Flash Drive Recovery எனும் மென்பொருள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் music sticks, digital cameras, flash drives, USB drives, PC cards போன்றவற்றில் இழக்கப்பட்ட புகைப்படங்கள், டாக்கிமென்ட் கோப்புக்கள், mp3 பாடல்கள் போன்ற ஏனைய கோப்புக்களையும் மீட்டிக் கொள்ள முடியும்.
|
இணைய வேகத்தினை அதிகரிப்பதற்கு
2:08 PM |
எனினும் சில இடங்களில் இணையத்தின் வேகமானது மிகவும் மந்தமான கதியிலேயே காணப்படும்.
இதனால் கோப்புக்களை தரவிறக்கம், தரவேற்றம் செய்யும் சந்தர்ப்பங்களில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு புதிய முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு வகையான இணைய இணைப்புக்களை ஒரே நேரத்தில் ஒன்றாக இணைத்து பயன்படுத்தி இணையத்தின் வேகத்தினை அதிகரிக்கச் செய்ய முடியும் என அறியப்பட்டுள்ளது.
|
அண்டவெளியில் 2 புதிய விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு
2:08 PM |
அவுஸ்திரேலிய விஞ்ஞானி அரோன் ரொபோதம் நடத்திய ஆய்விலேயே இந்த புதிய விண்மீன் திரள்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
இது குறித்து விஞ்ஞானி கூறுகையில், பூமி அடங்கியுள்ள பால்வெளி மண்டலத்தை(Milky Way Galaxy) போலவே இந்த புதிய விண்மீன் திரள்களும் உள்ளன.
விரிந்து கிடக்கும் வானத்தில் இன்னும் எத்தனை விண்மீன் திரள்களை நாம் கண்டறியாமல் விட்டிருக்கிறோம் எனத் தெரியவில்லை.
மொத்தம் 14 விண்மீன் திரள்கள் அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இந்த இரு விண்மீன் திரள்களும் நமது பால்வெளி மண்டலத்தைப் போலவே இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
|
விண்டோஸ் 8ல் மென்பொருட்களின் உதவியின்றி Screenshot எடுப்பதற்கு
2:07 PM |
எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இவ்வசதியினை மென்பொருட்களின் பயன்பாடு இன்றி பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு Screenshot எடுக்க வேண்டிய பகுதி மொனிட்டரில் தெரியும் போது PrtScn(Print Screen) எனும் பட்டனை அழுத்தினால் போதும்.
பின் Libraries எனும் பகுதியில் காணப்படும் Pictures இல் Screenshots எனும் பெயருடைய சுயமாக உருவாக்கப்பட்ட கோப்புறையினுள் குறித்த Screenshots ற்குரிய படம் காணப்படும்.
|
கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு
2:07 PM |
உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.
அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பறைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள கோப்பறையை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.
|
விரைவில் புதிய தோற்றத்தில் யூடியூப்
2:07 PM |
தற்போது பரீட்சார்த்த நிலையில் காணப்படும் இப்புதிய அம்சமானது Moodwall எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தமக்கு தேவையான வீடியோ வகைகளைக் கொண்டு இலகுவாக தேட முடிவதுடன் அவை தொடர்பான மேலதிக வீடியோக்களையும் பார்வையிட முடியும்.
அதாவது லேபிள்களை அடிப்படையாகக் கொண்ட இப்புதிய தோற்றத்தினைக் கொண்ட யூடியூப் இணையப் பக்கத்தினை விரைவில் அனைத்துப் பயனரர்களும் விரைவில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
மனிதனின் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
2:06 PM |
மனிதனின் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் பின்லாந்தின் அவுலு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேடி பிடிகெய்னன், ஜுகா ரோனிங் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இவர்களது ஆராய்ச்சி தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இதுபற்றி மேடி கூறுகையில், மனிதனின் பேச்சு, முக பாவம், குரல் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை கொண்டே அவரது உணர்ச்சியை இந்த ரோபோ துல்லியமாக தெரிந்துகொண்டு விடும்.
வழக்கமான வீடியோ கமெரா, மனிதனின் முகம் மற்றும் வாய் அசைவுகள், நெற்றி சுருக்கம் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்யும் கைனட் டெப்த் கமெரா, சத்தங்களை பதிவு செய்யும் மைக்ரோபோன், பிரத்யேக மென்பொருள், பிராசசர் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ரோபோ செயல்படுகிறது.
எதிராளியின் மனோபாவத்துக்கு ஏற்ப ரோபோவும் தன் முகத்தை மாற்றிக் கொள்ளும். நோயாளிகளின் முக மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பது, குற்ற விசாரணைகள் போன்ற பணிகளில் இந்த வகை ரோபோக்கள் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சீன பல்கலைக்கழகம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆராய்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
|
1AVCenter: கணனியில் அவசியம் காணப்பட வேண்டிய மென்பொருள்
1:44 PM |
இதே நேரம் பல வசதிகளைக் கொண்ட ஒரு மென்பொருளை நிறுவினால் கணனியின் வன்றட்டில் இடம் மீதப்படுத்தப்படுவதுடன், கணனியின் தொழிற்பாடும் வினைத்திறனானதாகக் காணப்படும்.
இதன் அடிப்படையில் 1AVCenter என்ற மென்பொருளானது Capture, record, broadcast போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் மூலம் உங்களது தனிப்பட்ட இணையத்தளத்திற்கு பாதுகாப்பாக கோப்புக்களை பரிமாறுதல், வேறொரு நபருக்கு அனுப்புதல், தரவேற்றம் போன்றவற்றையும், எந்தவொரு முதலிலிருந்தும்(source) ஒலிப்பதிவு செய்யக்கூடிய வசதியையும் கொண்டுள்ளதோடு இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.
|
கணனியை முடக்கும் புதிய வைரஸ்
1:43 PM |
வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ், பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கணனியில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றிற்கு இடையே புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஷமூன்(Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது.
செக்யூலர்ட்(Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கணனி ஒன்றினை இணையம் வழியே கைப்பற்றுகிறது.
பிறகு அங்கிருந்து கொண்டு நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கணனியில் உள்ள கோப்புகளை திருத்தி எழுதுகிறது.
அதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும்(MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கணனியை இயக்கவே முடியாது.
செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை.
2010ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.
இவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1990ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கணனி பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன.
எவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.
தாங்கள் கைப்பற்றிய கணனியிலிருந்து பயனர் பெயர், கடவுச் சொல், வங்கிக் கணக்குகள் அவை குறித்த தகவல்களை கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன.
மேலும் கைப்பற்றிய கணனியை தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.
ஆனால் இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.
|
அறிமுகமாகின்றது LG Optimus L9 கைப்பேசிகள்
1:42 PM |
கொரிய நாட்டிலில் தயாரிக்கப்பட்டு வரும் இக்கைப்பேசிகள் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு உருவாக்கப்படுகின்றது.
மேலும் 1GHz வேகத்தில் செயற்படவுள்ள புரோசசர், 4.7 அங்குலமுடைய தொடுதிரை, 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாவும் காணப்படுகின்றது.
125 கிராம்களே உடைய இக்கைப்பேசியின் உள்ளக நினைவகமானது 4GB வரை காணப்படுவதுடன் 44 வகையான மொழிகளுக்கு துலக்கத்தை ஏற்படுத்தக்கூடிய Optical Character Recognition மென்பொருளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
கையில் பிடித்த படியே கைபேசிகளுக்கு சார்ஜ் போடலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
1:41 PM |
இதை அமெரிக்காவின் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நானோ டெக்னாலஜி பேராசிரியர் டேவிட் கரோல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், மிகச்சிறிய கார்பன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி கைபேசிகளுக்கு சார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
கணனியின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு
1:41 PM |
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
இதன் மூலம் குழந்தைகள் கணனிகளைப் பாவிக்கும் போதோ அல்லது ஊழியர்களின் கணனிப் பாவனையையோ அல்லது ஏனைய குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளையோ துல்லியமாக கண்காணிக்க முடியும்.
தவிர இம்மென்பொருளின் உதவியுடன் வெப் கமெரா மூலம் பயணம் செய்கையிலோ அல்லது அலுவலகத்திலிருந்தவாறோ கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010ன் சிறப்பம்சங்கள்
1:39 PM |
விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியாகி மக்களிடையே அதன் அபார வெற்றி உறுதியான பின்னரே ஆபீஸ் 2010 வெளியானது.
விண்டோஸ் விஸ்டா போல, ஆபீஸ் 2007 தொகுப்பு பயனாளர்களிடையே அவ்வளவாக பெயர் எடுக்கவில்லை என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட், ஆபீஸ் 2010 தொகுப்பினை புதிய இன்டர்பேஸ் மற்றும் பயன்தரும் வசதிகளுடன் வடிவமைத்து வழங்கியது.
இணைய அடிப்படையில் கூகுள் நிறுவனம் தன் கூகுள் டாக்ஸ் வசதி மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு சவாலைத் தந்ததனால், ஆபீஸ் 2010 தொகுப்பினை மிகக் கவனமாக முற்றிலும் புதிய எதிர்பாராத வசதிகளுடன் வடிவமைத்தது.
தேடல்(Find) கட்டத்தில் நாம் தேடும் டாகுமெண்ட்கள் பட்டியலிப்படுகின்றன. இவற்றின் பிரிவியூ காட்சி தேடப்படும் வகையிலான டாகுமெண்ட்கள் அனைத்திற்கும் கிடைப்பதால், நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம்.
ஒரே டாகுமெண்ட்டில் பலர் எடிட் செய்வதனை மிக எளிமையாக்கி உள்ளது ஆபீஸ் 2010. Windows Live account இருந்தால், டாகுமெண்ட்டினை எடிட் செய்கையிலேயே, வேர்டில் இருந்தபடியே, மற்றவருடன் கலந்தாலோசிக்கவும் முடியும்.
இத்தொகுப்பில் நம் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுக்கு shadow, bevel, glow, and reflection போன்ற விசுவல் எபக்ட் தர முடியும். இந்த எபக்ட் அமைத்த டெக்ஸ்ட்களிலும் ஸ்பெல்லிங் சோதனை நடத்த முடியும். இதுவரை படங்களுக்கு மட்டுமே நாம் இணைத்த சில எபக்டுகள், இப்போது டெக்ஸ்ட்களுக்கும் கிடைக்கின்றன.
இதற்கு SmartArt Graphics என்ற வசதி தரப்பட்டுள்ளது. போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் இல்லாமலேயே, இமேஜ்களுக்கு கூடுதல் கிராபிக்ஸ் வசதியினை வேர்ட் தொகுப்பில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் பைலை அமைத்துவிட்டு சேவ் செய்திட மறந்து விட்டால், அதன் ட்ராப்ட்(Draft) பதிப்பை வேர்ட் 2010 வழங்குகிறது.
வேர்ட் தொகுப்பில் இருந்தபடியே ஸ்கிரீன் ஷாட் எனப்படும் திரைக் காட்சிகளை உருவாக்கவும், இணைக்கவும் முடியும். இந்த ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ள Backstage வியூ, வழக்கமான பைல் மெனுவின் இடத்தைப் பிடித்துள்ளது. ரிப்பன் இன்டர்பேஸ் மூலம், மிக விரைவாக கட்டளைகளைப் பெற முடிகிறது.
வேர்ட் 2010 தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம் ஒரே நேரத்தில் நாம் பல மொழிகளைக் கையாளும் வசதி கிடைத்திருப்பது தான். சொற்கள், சொல் தொகுப்புகள் மற்றும் டெக்ஸ்ட் ஆகியவற்றை மொழி பெயர்த்துப் பெற முடிகிறது. ஒவ்வொரு மொழிக்குமான ஸ்கிரீன் டிப்ஸ்களை தனித்தனியே அமைத்துக் கொள்ள முடியும்.
|
பயர்பொக்சின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
1:39 PM |
Firefox 15 என்று அழைக்கப்படும் புதிய பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் மேலதிக அம்சங்களை உள்ளடக்கிக் காணப்படுவதுடன் சிறந்த இணையத்தேடல் அனுபவத்தையும் தரக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக விரைவான தேடல், குறைந்தளவு மெமரி பாவனை போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
மேலும் விண்டோஸ், அப்பிளின் மெக், லினக்ஸ் என்பவற்றிற்கு தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|
RAM Memory-ன் செயல்பாடுகள்
1:38 PM |
இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும்.
பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
ராம்(RAM: Random Access Memory):
இதனை ஒத்த தொழில்நுட்ப சொற்கள் Memory, Random Access Memory, Short Term Memory, DDR Memory, DDR2 Memory, DDR3 Memory மற்றும் மேலும் சில.
பயன்பாடு:
தற்காலிகமாக புரோகிராம்கள் கையாளும் தகவலினைத் தேக்கி வைக்கவும், மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது.
இதில் பதியப்படும் தகவல்கள்(டேட்டா), புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.
இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும்.
ராம் மெமரி சரியாக இயங்க தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால் அனைத்து தகவல்களும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.
எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும்.
DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.
|
Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
1:37 PM |
இருப்பினும் அவற்றில் கிடைக்கின்ற 2GB முதல் 25 GB என்ற சேமிப்பிடம், பெரிய கோப்புக்களை கிளவுட்டில் சேமித்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு போதாததாக இருக்கலாம்.
Syncbox Server என்பது உங்களுக்கென்ற தனிப்பட்ட கிளவுட் சேவையை உங்களிடமிருக்கும் ஹாட்டிஸ்க்கில் உருவாக்கிட உதவுகின்றது.
அலுவலகத்தில் அல்லது வீடுகளில் இருக்கும் கணனியிடையே மற்றும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் டிவைஸ்களிடையே இணையத்தின் மூலம் பெரிய கோப்புக்களை பகிர முடிகின்றது.
கீழுள்ள இணைப்பிற்கு சென்று தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னர்(சேர்வர் மென்பொருள் விண்டோஸில் மட்டும் இயங்கும்) , Syncbox ID, பாஸ்வேர்ட், DDNS key and Data location என்பவற்றை தரவேண்டும்.
எனினும் Quick Install ஐ தெரிவு செய்தால் இவை அனைத்தும் தானாகவே உருவாக்கப்படும்.
மேலும் Taskbar இல் தெரியும் Synbox ஐகானை அழுத்தி தேவையான செட்டிங்கை மாற்றிவிட முடிகின்றது.
client மென்பொருளை Syncbox ID and password மட்டும் கொடுத்து இலகுவாக நிறுவிடலாம்.
மேலும் கோப்புக்களை server to client synchronization செய்தல் இதன் கூடுதல் வசதியாகும்.
இவை அனைத்தும் முடிந்த பின்னர் தனிப்பட்ட கிளவுட் சேமிப்பிடம் உருவாகிவிடும்.
|
அறிமுகமாகின்றது சோனியின் Xperia டேப்லெட்கள்
1:36 PM |
இதற்கான அலுவலக ரீதியான அறிவித்தலை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம் குறித்த டேப்லெட் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லெட் ஆனது Nvidia Tegra 3 quad-core புரோசசரை உள்ளடக்கியுள்ளது.
மேலும் 9.4 அங்குலமுடையதும், 1280 x 800 பிக்சல்களைக் கொண்ட தொடுதிரை முகப்பைக் கொண்டுள்ளதுடன் இதில் காணப்படும் மின்கலமானது தொடர்ச்சியாக 10 மணித்தியாலங்கள்வரை செயற்படக்கூடியது.
தவிர இவை 16GB, 32GB, 64GB சேமிப்புக் கொள்ளளவுகளின் அடிப்படையில் முறையே $399, $499 , $599 பெறுமதிகள் உடையவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
Olloclip: iPhoneகளில் துல்லியமான புகைப்படங்களை எடுப்பதற்கான துணைச்சாதனம்
1:31 PM |
இவற்றின் அடிப்படையில் தற்போது Olloclip எனும் 3-in-1 3 வில்லைகளை(lens) உள்ளடக்கிய துணைச்சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சாதனமானது iPhoneகளைப் பயன்படுத்தி துல்லியமானதும், பரந்த கோணத்திலும் புகைப்படங்களை எடுப்பதற்கு பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இச்சாதனமானது iPhone 4, 4S ஆகியவற்றில் இணையத்து பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சாதனத்தின் பெறுமதி 70 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
|
SkyDrive வசதியை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு
1:31 PM |
மிக்சிறிய கோப்பு அளவுடைய இம்மென்பொருளினைப் பயன்படுத்தி இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை ஒன்லைனில் சேமிக்க முடிவதுடன் பாதுகாப்பானதாகவும் காணப்படுகின்றது.
அன்ரோயிட் சாதனங்கள் தவிர்ந்த மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கைப்பேசிகள், அப்பிள் சாதனங்கள் என்பவற்றிலும் இவ்வசதியைப் பயன்படுத்துவதற்கு தனியான மென்பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்ரோயிட் சாதனங்களுக்கான இம்மென்பொருளை Google Play இல் தரவிறக்கம் செய்ய முடியும்.
|
சாம்சங் கேலக்ஸ் நோட் IIன் அறிமுக வீடியோ வெளியீடு
1:30 PM |
இந்நிலையில் கூகுள் அதன் நெக்சஸ்-7 டேப்லட்டை வெளியிட்டு விற்பனையை தொடங்கி ஆச்சரியமளித்தது.
இதே போன்று சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து, அதன் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் அறிமுக வீடியோக்களை காண
|
கைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை
1:30 PM |
இந்த பயன்பாட்டினால் நமக்கு நன்மை என்றாலும், நம்மை அறியாமலே நமக்கு பெரும் துன்பத்தினை ஏற்படுத்துகிறது என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர்.
இதுவும் இன்றைய இளைய தலைமுறையினர் சக நேரமும் ஏன் தூங்கும் போதுகூட நெஞ்சிலே வைத்து தூங்குபவர்களும் உண்டு. குறிப்பாக காதலன்- காதலி உரையாடல் என்றால் அது விடிய, விடிய போய்ச்சேரும்.
இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் கைபேசிகளால் ஏற்படும் தீமை குறித்த எச்சரிக்கை செய்தி
1. கைபேசியை உபயோகப்படுத்தாத நேரத்தில், அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது.
2. பேசும் போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக் கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும்.
3. நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ் பகிர்ந்து கொள்ளவும்.
4. நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது.
5. குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம் கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.
6. போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.
|
ஆண்ட்ராய்ட் கைபேசிகளை முழுமையாக பக்கப் செய்வதற்கு
1:29 PM |
ஏற்கனவே ரூட்டிங்க் செய்து அல்லது Bootloader Unlock மூலம் பக்கப் செய்வது அனைவருக்கும் ஏற்ற முறையல்ல. ஏனெனில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட முழுமையாக டிவஸை ரீஸெட் செய்தே மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக Gigadroid என்ற பிரபல ஆண்ட்ராய்ட் கருத்துக்கள டெவெலப்பர்கள் Ultimate Backup Tool ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
விண்டோஸில் இயங்கும் இந்த டூலைக்கொண்டு ஆண்ட்ராய்ட் 4.0 டிவைஸ்களை முழுமையாக பக்கப் செய்து பின்னர் ரீஸ்டார் செய்யவும் முடியும் என்கிறார்கள்.
Galaxy Nexus, Galaxy S II தொலைபேசிகளிலும் பரிசோதனை செய்துள்ளனர்.
Ultimate Backup Tool பின்வரும் முறைகளில் பக்கப் செய்கின்றது.
• Backup all without system apps.
• Backup all with system apps. • Backup app and device data. • Backup apps. • Backup device shared storage/SD card contents.
முழுமையாக பக்கப் செய்ய முன்னர் உங்கள் ஆண்ட்ராய்ட் டிவைஸில் setting இல் இருக்கும் Developer option சென்று USB debugging ஐ தெரிவு செய்யுங்கள். அதன் பின்னர் Desktop Backup password ஆப்ஸனில் பாஸ்வேர்ட் தந்து சேமிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
அவ்வாறு செய்த பின்னர் கணனியில் ஆண்ட்ராய்ட் டிவைஸின் யுஎஸ்பியை செருகியதும் கிடைக்கும் ஸ்கீரினில் பக்கப்பை செயற்படுத்த அல்லது நிறுத்துவதற்கு முடிகின்றது.
|
அதிரடியாக வெளியிடப்பட்டது Firefox 16 பீட்டா பதிப்பு
1:29 PM |
இந்நிலையில் தற்போது அதிரடியாக அதன் 16வது பதிப்பின் பீட்டா பதிப்பை வெளியிட முடிவு செய்துள்ளது.
இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் Command Line இல் அமைந்த Developer டூல்களைக் கொண்ட பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Firefox 16 ஆனாது விண்டோஸ், லினக்ஸ், மெக் போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடிய வகையில் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வலுவான பல அம்சங்களைக் கொண்ட இப்பதிப்பின் மூலம் பயனர்கள் இலகுவாக இணைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
1:28 PM |
GNOME இனை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த அப்பிளிக்கேசன்களை விட மேலும் மெருகூட்டப்பட்ட அப்பிளிக்கேசன் பக்கேஜ்களை உள்ளடக்கியிருக்கும் என அதனை கட்டியெழுப்பியவர்களுள் ஒருவரான Jeremy Bicha என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வியங்குதளம் வெளியிடப்படுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் http://gnomebuntu.org/ எனும் முகவரிக்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்
|
வயர்லெஸ் சார்ஜ் முறையுடன் வெளியாகின்றது Nokia Lumia 920
1:27 PM |
இக்கைப்பேசியானது 1.5GHz வேகத்தில் செயற்படும் புரோசசரை உள்ளடக்கியுள்ளதுடன் 8 மெகாபிக்சல் கமெரா, 32 GB உள்ளக மெமரி 1GB பிரதான நினைவகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 4.5 அங்குலமுடைய உயர் துல்லியம் கொண்ட தொடுதிரையினையும் கொண்ட இக்கைப்பேசியானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
Collins Revision Algebra: மாணவர்களுக்கு அவசியமான மென்பொருள்
1:26 PM |
இவற்றின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள Collins Revision Algebra எனும் மென்பொருளானது கணித செயற்பாடுகளை துல்லியமாக செய்துபார்ப்பதற்கும், மீட்டல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
இம்மென்பொருளில் 70 வகையான மீட்டல்களும், 290 பயிற்சிகள், மற்றுமு் 30 வீடியோ வழிகாட்டல்களையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்ரோயிட், அப்பிள் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)