இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை Facebook, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம், தரவிறக்கம் செய்யலாம்.
பொதுவாக கோப்புகளை பகிரும் தளங்களில் குறிப்பிட்ட கோப்பை பதிவேற்றம் செய்து விட்டு அதற்கான இணைய முகவரியை யாருக்கு பகிர வேண்டுமோ அவர்களுக்கு இணையத்தின் முகவரியை அனுப்பி வைத்தால் அந்த முகவரியைக் கொண்டு உரிய கோப்பை அவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
File Friend தளத்தில் நேரடியாகவே நண்பர்கள் வட்டத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். File Friend-ல் கோப்புகளை பதிவேற்றுவது மிகவும் சுலபம். பதிவேற்றிய பின் பயனாளிகள் தங்களின் Facebook உட்பட பல்வேறு சமூக வலைப்பின்னல் சேவைகளில் அதனை இணைத்துவிடலாம்.
இதன் மூலம் அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் அந்த கோப்பை பெற முடியும். கோப்புகளை பகிர்ந்து கொள்ளாமல் அதனை சேமித்தும் வைக்கும் வசதியும் உள்ளது.
இணையதள முகவரி http://www.filefriend.com/index.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக