உதாரணமாக உங்கள் வலைப்பூ blogger தளத்தில் இருந்தால்
முன்பு – www.techtamil.com என்று இருந்தது இப்பொழுது- www.techtamil.in ஆக மாறும்.
இந்த மாற்றத்தை பற்றி Google எந்த அறிக்கையையும் இது வரை வெளியிட வில்லை. ஆதலால் இந்த மாற்றங்கள் இந்திய வலைபூக்களில் மட்டும் தான் ஏற்ப்பட்டு இருக்கிறதா இல்லை மற்ற நாட்டினருக்கும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என எந்த தகவலும் இல்லை.
இந்த மாற்றத்தினால் இதுவரை வலைப்பூக்கள் பெற்று இருந்த அலெக்சா மறைந்து விட்டது. பழைய படி ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இது அனைவருக்கும் பெறும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. ஆனால் வலைப்பூக்களுக்கு கஸ்டம் டொமைன் பயன்படுத்தி வந்த வலைப்பூக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.
பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கும் தானாகவே redirect ஆவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால் இரண்டு மாதங்களில் அலெக்சா ரேங்க் பழைய நிலைமைக்கு வந்துவிடும். மற்றும் followers, Email subscriber வசதிகளிலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. பழைய படியே இருக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக